"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை நம் முகம் காட்டிவிடும். முகம் நமக்கு கண்ணாடி போன்றது நம்முள் என பிரச்சனை வந்தாலும் முகம் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். அது மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம். என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. அதும் நம் வீட்டில் உள்ள பொருள் வைத்தே நாம் அழகா முடியும் என்றால் அதை விட வேறு என்ன வேண்டும். அதில் ஒன்று தான் முட்டை. முட்டை பயன்படுத்தாத வீடு உண்டு என்றே சொல்ல முடியாது அதனை பயன்படுத்தி எப்படி இளமையாக இருப்பது என்று இங்கு 4 வழி முறைகளை காணலாம். முகம் பளிச்சிட ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் ம...
Health tips everyday inspires and empowers people to live their healthiest lives, each and every day, trusted and natural medicine. It gives tips to improve health, beauty and wellness without side effects. Learn more about health.