உடல் பருமனை எப்படி எளிதாக குறைக்கலாம் என்பதனை இங்கு பார்ப்போம், இதற்கு எந்த ஒரு உடற்பயிற்சியும் தேவை இல்லை. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து சீக்கிரமாகவே ஸ்லிம்மாக மாறலாம். உடல் எடையைக் குறைப்பது எப்படி என்ற செய்முறையை வீட்டிலேயே செய்து நீங்கள் பயன் பெறலாம். 1.முறை #1 தேவையான பொருட்கள்: சீரகம் (2 டேபிள் ஸ்பூன்) எலுமிச்சை சாறு (1 டேபிள் ஸ்பூன்) தேன் (1 டேபிள் ஸ்பூன்) செய்முறை: சீரகத்தை எடுத்து நன்றாக கழுவி இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், பின்னர் அதனை மறு நாள் காலை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சீரகம் தண்ணீர் இரண்டையும் நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் சீரக நீரை மட்டும் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலை பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஸ்லிம்மாக மாறும். முறை #2 தேவையான பொருட்கள்: சீரகம் 100 கிராம் தேன் (1 டேபிள் ஸ்பூன்) செய்முறை: 100 கிராம் சீரகத்தை அரைத்து நன்றாக பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதனை சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் கலக்கி அதனுடன் தேன் சேர்த்து காலை மாலை இரு வேலைக...
Health tips everyday inspires and empowers people to live their healthiest lives, each and every day, trusted and natural medicine. It gives tips to improve health, beauty and wellness without side effects. Learn more about health.