"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை நம் முகம் காட்டிவிடும்.
முகம் நமக்கு கண்ணாடி போன்றது நம்முள் என பிரச்சனை வந்தாலும் முகம் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். அது மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது.அதும் நம் வீட்டில் உள்ள பொருள் வைத்தே நாம் அழகா முடியும் என்றால் அதை விட வேறு என்ன வேண்டும். அதில் ஒன்று தான் முட்டை. முட்டை பயன்படுத்தாத வீடு உண்டு என்றே சொல்ல முடியாது அதனை பயன்படுத்தி எப்படி இளமையாக இருப்பது என்று இங்கு 4 வழி முறைகளை காணலாம்.
முகம் பளிச்சிட
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற முடிகளை அகற்ற
ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் கழித்து உரித்து எடுக்கவும்.
இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்க
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.
பின்பு ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 40-45 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.
இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள்.
இந்த மாஸ்க்கினால் தலைமுடியின் மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்கும்.
கைகளை வறட்சியின்றி வைக்க
கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சுரைசரைத் தயாரிக்கலாம்.
அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம்.
இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும், துணிகள் துவைத்திருந்தாலும், கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.
முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர
இரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
விரைவில் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். இவ்வாறு செய்து வந்தால் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை நம் முகம் காட்டிவிடும்.
முகம் நமக்கு கண்ணாடி போன்றது நம்முள் என பிரச்சனை வந்தாலும் முகம் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். அது மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது.
அதும் நம் வீட்டில் உள்ள பொருள் வைத்தே நாம் அழகா முடியும் என்றால் அதை விட வேறு என்ன வேண்டும். அதில் ஒன்று தான் முட்டை. முட்டை பயன்படுத்தாத வீடு உண்டு என்றே சொல்ல முடியாது அதனை பயன்படுத்தி எப்படி இளமையாக இருப்பது என்று இங்கு 4 வழி முறைகளை காணலாம்.
முகம் பளிச்சிட
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற முடிகளை அகற்ற
ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் கழித்து உரித்து எடுக்கவும்.
இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்க
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.
பின்பு ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 40-45 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.
இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள்.
இந்த மாஸ்க்கினால் தலைமுடியின் மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்கும்.
கைகளை வறட்சியின்றி வைக்க
கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சுரைசரைத் தயாரிக்கலாம்.
அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம்.
இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும், துணிகள் துவைத்திருந்தாலும், கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.
முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர
இரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
விரைவில் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். இவ்வாறு செய்து வந்தால் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்.
Comments
Post a Comment