உடல் பருமனை எப்படி எளிதாக குறைக்கலாம் என்பதனை இங்கு பார்ப்போம், இதற்கு எந்த ஒரு உடற்பயிற்சியும் தேவை இல்லை. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து சீக்கிரமாகவே ஸ்லிம்மாக மாறலாம். உடல் எடையைக் குறைப்பது எப்படி என்ற செய்முறையை வீட்டிலேயே செய்து நீங்கள் பயன் பெறலாம்.
1.முறை #1
தேவையான பொருட்கள்:
சீரகம் (2 டேபிள் ஸ்பூன்)
எலுமிச்சை சாறு (1 டேபிள் ஸ்பூன்)
தேன் (1 டேபிள் ஸ்பூன்)
செய்முறை:
சீரகத்தை எடுத்து நன்றாக கழுவி இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், பின்னர் அதனை மறு நாள் காலை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சீரகம் தண்ணீர் இரண்டையும் நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் சீரக நீரை மட்டும் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலை பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஸ்லிம்மாக மாறும்.
முறை #2
தேவையான பொருட்கள்:
சீரகம் 100 கிராம்
தேன் (1 டேபிள் ஸ்பூன்)
செய்முறை:
100 கிராம் சீரகத்தை அரைத்து நன்றாக பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதனை சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் கலக்கி அதனுடன் தேன் சேர்த்து காலை மாலை இரு வேலைகளிலும் குடித்து வந்தால் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.
முறை #3:
தேவையான பொருட்கள்:
வெந்தயம் (2 டேபிள் ஸ்பூன்)
தேன் (1 டேபிளை ஸ்பூன்)
செய்முறை:
வெந்தயத்தை இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி வேந்தயது அப்படியே சாப்பிட்டு வரலாம். அப்படியே வெந்தயத்தை சாப்பிட முடியாதவர்கள் அதனை நன்றாக இடித்து பசையாகி அதனுடன் சுடுநீர் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். வெந்தயத்தில் பைபர்(fiber) 75% உள்ளதால் உடலுக்கு தேவையான சக்தியை தந்து தேவையற்ற கொழுப்புகளை கரைகிறது.
இதனை செய்தால் 2-3 வாரங்களில் உடல் எடை குறைவதை காணலாம்.
“வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள், இவை இரண்டும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் சக்தி வாய்ந்தன.”
Comments
Post a Comment