நாம் அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள நினைப்போம் ஏனென்றால், முகம் தான் நமது உடல் உறுப்பில் ஒரு முக்கிய பங்கை வகிப்பதை நாம் அறிவோம். அப்படியான முகம் வெயில் மற்றும் தூசுகளால் பாலடைகின்றது. அதனை நாம் சரி செய்யவேண்டும். இங்கே, அதற்காக நச்சின்னு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதனை காண்போம்.
1. முகம் பொலிவு பெற:
கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
2. முகம் புத்துணர்ச்சி பெற:
மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்துங்கள்.
3. முகம் பளிச்சிட:
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
4. கருமை நீங்க:
ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் 1 கொய்யாப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
அதன் பின் வறட்சியைத் தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
இது போன்ற டிப்ஸ் வேணும்னா கமெண்ட் பண்ணுங்க !!!

Comments
Post a Comment