ஆண்களோ பெண்களோ இப்பொது இருக்கும் அனைவர்க்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் மற்றும் பொடுகு. ஒரு நாளுக்கு சராசரியாக 100 முடி உதிரலாம் அதற்கு மேல் உதிர்ந்தால் அதனை சரி செய்ய வேண்டும். இங்கே சில வீடு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதனை என்னவென்று பாப்போம்.
1. வெங்காயம்(Onion):
வெங்காயம் முடி உதிர்வதை தடுக்கும் ஒரு அறிய மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள சல்பர் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் , முடி உதிர்ந்த இடத்தில திரும்ப முடியை வளர செய்யும். வெங்காயத்தை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதனை முடி இல்லாத வழுக்கையான இடத்திலோ அல்லது ஸ்கல்ப் (முடியின் வேர் பகுதி) தடவ வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது கெமிக்கல் குறைவாக இருக்கும் ஷாம்பு உபயோகித்து குளிர்ந்த நீரில் அலசவும். இதே மாதிரி வாரத்திற்கு 2-3 தடவை செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
வெங்காயத்துடன், பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து கூட உபயோக படுத்தினால் முடி உதிர்வது மட்டுமில்லாமல் பொடுகையும் கட்டுப்படுத்தும்.
2. வெந்தயம்(Fenugreek):
வெந்தயம் முடிக்கு பளபளப்பையும் முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதற்கு நீங்கள் செய்வேண்டியது இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் அதனை அரைத்து தலை தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வரவும். இது பொடுகு மற்றும் முடி உதிர்வதை தடுக்கும் சக்தியை கொண்டிருக்கிறது.
3. கற்றாழை (ஆலுவேரா - aloe vera):
முடி பிரச்சனைகளை தடுக்கும் மற்றொரு வழி கற்றாழை. இதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை மட்டும் எடுத்து அதனை தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசவும். இது முடிக்கு தேவையான சக்தியையும் பொடுகையும் ஒழிக்கும். மற்றொரு வழி தேங்காய் எண்ணெயை சுடவைத்து அதனுடன் கற்றாழையை வெட்டி அல்லது ஜெல் போன்ற பகுதியை மட்டும் போட்டு பொன்னிறமாக வரும் வரை சுட வைத்து பின்னர் அதனை உபயோகித்து வரலாம்.
4. கறிவேப்பிலை, மிளகு மற்றும் எலுமிச்சை விதைகள்: (Curry leaves, pepper, lemon seeds)
கறிவேப்பிலை சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு எலுமிச்சை விதைகளை அரைத்து பொடியாக்கி அதனை தலையில் தூயநீருடன் சேர்த்து கலக்கி தடவவும். பின்னர் 1 மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் பொடுகு அதனால் ஏற்படும் எரிச்சல் முடி உதிர்தல் அனைத்தும் குணமாகும்.
“உடல் சூடத்தை தவிர்த்தாலே முடி உதிரும் பிரச்னை வராது. வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் முடி உதிரும் பிரச்னையும் வராது மற்றும் தண்ணீர் நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் குடித்து வரவும்”.
Comments
Post a Comment