நாம் அனைவருமே எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. ஏதாவது ஒரு நேரத்தில் கோபப்படுவோம், மனசோர்வாக இருப்போம், தூக்கமின்மையாக இருப்போம் இதனை சரி செய்ய ஒரு சில டீ வகைகளை அருந்தினால் நாம் அதிலிருந்து விடுபட்டு சுகமாக மனநிலையை உணரலாம். அது என்னென்ன டீ வகை என்று பார்ப்போமா ?
தூக்கம் தேவைப்படும்போது :
லாவெண்டர்(lavender) – இதன் சுவை மற்றும் மனம் அற்புதமாக இருக்கும். இதனை அருந்தும்பொழுது நமக்கு தூக்கமின்மையை குறைத்து தூக்கத்தை வரவழைக்கிறது மற்றும் இது இதய நோய் மற்றும் செரிமான பிரச்சனையை சரி செய்வ உதவுகிறது.
2. பதற்றமாக இருக்கும்பொழுது (Anxious):
டார்ட் செர்ரி (Tart Cherry) – இந்த டீயை பதற்றமான சூழ்நிலைகளில் அருந்தினால் மனதில் தெளிவு பிறக்கும்.
3. சங்கடமான சூழ்நிலைகளில் இருக்கும்பொழுது (uneasy):
பெப்பெர்மிண்ட் (peppermint) – மிளகுக்கீரை இலைகளால் ஆக்கப்பட்ட இந்த டீயை நாம் பருகினால் சங்கடமான சூழ்நிலைகளில் புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் இது செரிமானத்தை ஊக்குவிக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
4. நேர்மறை எண்ணங்கள் உருவாக:
இந்தியன் மசாலா டீ (Indian Masala Chai): இந்த டீயில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இது மனதிற்கு நேர்மறை எண்ணங்களை கொடுக்கிறது மற்றும் இதனால் களைப்பு, எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
5. உடனடி ஆற்றலுக்கு :
கருப்பு தேனீர்(black tea) – இந்த டீயை குடித்தால் இருக்கும் களைப்பை போக்கி உடம்பிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது மற்றும் இது மனஅழுத்தம், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உதவுகிறது.
6. துன்பமாக இருக்கும்போது:
இஞ்சி டீ: இந்த டீயை குடித்தால் மனதில் உள்ள பாரத்தை தூக்கி எறிந்ததுபோல் மனம் உணரும். இது வயிற்று வலி மற்றும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மற்றும் இது ரத்த ஓட்டத்தை சீராகவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
7. கோபமாக இருக்கும்போது:
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு டீ: எப்போதும் சிடுசிடு என்று இருப்பவர்களுக்கு இந்த டீ பருகினால் அவர்கள் மனநிலை மாறவும் வாய்ப்பு உண்டு. இதனால் செரிமானம், நரம்புகளுக்கு, இதயத்திற்கு மிகவும் நல்லது.
8 மனஅழுத்தத்தை குறைக்க:(stressed)
சமோமிலே டீ:( chamomile tea): இந்த டீயில் உள்ள மருத்துவ குணங்கள் மனஅழுத்தத்தை போக்கி புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனை குடித்து வந்தால் கண்ணிற்கு கீழே இருக்கும் கருப்பு மறையும் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாகும் என்பதே உண்மை.
9. மனசோர்வாக இருக்கும்பொழுது:
கர்ப்புறப்புல் டீ(lemongrass tea): இந்த டீ உடலிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது பூஞ்சை தோற்றுநோய்களையும் காய்ச்சல் மற்றும் கேன்சரை உருவாகும் செல்களை அழிகிறது.
10. களைப்பை போக்க:
கிரீன் டீ (green tea): தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால் உடல் களைப்பை போக்கும். மற்றும் இது உடல் எடையை குறைக்கும் ரத்தத்தை சுதிகரிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Comments
Post a Comment