தொப்பை என்பது ஆறில் இருந்து அறுபது வரை அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை. தற்போது இளம் வயதினருக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
இதனை ஒரு உடல் உறுப்பு மாதிரி நாம் நினைத்து கொள்கிறோம். அது தனியாக இருக்கிறதே அது ஒரு வியாதியின் காரணமாக இருக்குமோ என்னமோ என்று யாரும் இப்பொழுது நினைத்து பார்ப்பதில்லை. அழகியல் சம்மந்தமாக மட்டுமே நாம் அதை நினைத்து கவலை படுகிறோம், ஆனால் அதனால் ஏற்படும் வியாதியை நாம் யோசிப்பதில்லை. தொப்பை இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது நாம் தொப்பையை சரி செய்வதற்கு அந்த காரணங்களை சரி செய்தால் மட்டுமே முடியும்.
என்னென்ன காரணத்தினால் தொப்பை வருகிறது:
- அஜீரணம் இதற்கு ஒரு முக்கிய காரணம். இதனால் பல வயிற்று சம்மந்தப்பட்ட நோய்களும் வரும். நாம் சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என்றால் அது கண்டிப்பாக தொப்பையை தான் போய் முடியும்.
- மலச்சிக்கல் ஏற்படுவதானால் கூட தொப்பை வர நிறைய காரணங்கள் உள்ளது.
- வாயு தொல்லை மற்றும் வாயு வெளியில் போகாமல் இருப்பது. வாயு வெளியில் போகாமல் இருக்குமேயானால் வயிறு உப்புசமாக இருக்கும், நாளடைவில் அது தொப்பையாக மாறக்கூடும்.
- குடலில் இருக்கும் பிரச்னையால் கூட தொப்பை வர வாய்ப்பு உள்ளது, எனவே தொப்பை வந்தால் குடலை பரிசோதித்துக்கொள்வது நல்லது.
- தூக்கமின்மை, மற்றும் பகலில் தூங்குதல் தொப்பை வர முக்கிய காரணமாகும். நாம் பகலில் உணவு உண்டு செரிக்கும் முன்பே தூங்குவதால் அது செரிமானத்தை நிறுத்தி தொப்பை உருவாகும் வேலைகளை செய்கின்றன.
“பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, பசிக்காது நேரத்தில் சாப்பிடுவது மிக பெரிய தவறு”.
ஏனென்றால் சில அமிலங்கள் சுரப்பதால் தான் செரிமானம் நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, நாம் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் அந்த அமிலங்கள் தொப்பையை உருவாக்கி அதனை தடிமனாக மாற்றுகிறது.
தொப்பையை அப்படி என்னதான் உள்ளது?:
நாம் அனைவரும் கண்டிருப்போம் 40 அல்லது 45 வயது உள்ளவர்கள் பெரியதாக தொப்பை வைத்திருப்பார்கள் பானை மாதிரி. அதில் என்னதான் உள்ளது என யாரது நினைத்தது உண்டா. அதில் வெறும் காற்று மட்டும் இல்லை நம் உடம்பில் உள்ள தோஷங்கள் (toxins) எல்லாமே சேரும் குப்பை தொட்டியகத்தான் நம் தொப்பை உள்ளது. அப்படி ஒரு குப்பை தொட்டியை நம் கூடவே வைத்திருப்பதனால் நிறைய பிரச்சனைகள் வரும்.
சரி தொப்பை வந்துவிட்டது அதனை எப்படி குறைப்பது?
தொப்பை குறைக்க வேண்டுமேயானால் சுட வைத்த நீரை பருகவேண்டும், சூடு கஞ்சி சாப்பிடவேண்டும் மற்றும் அனைத்தையும் சுட வைத்தே சாப்பிட வேண்டும். சீக்கிரமாக செரிக்க கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும் (light food). ராகி சேமியா, வெஜிடேபிள் சூப் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும், அப்படி செய்தால் தொப்பையில் உள்ள தோஷங்கள் குறைந்து வயிறு நேராக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
“சூடு நீர், சுக்கு நீர் இரண்டும் தொப்பையை குறைக்கும் சக்திவாய்ந்தன”
பெண்கள் அனைவரும் தொப்பை விழாமல் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதற்கு சரியான வழி உடற்பயிற்சி. தினமும் காலையில் உடற்பயிற்சி தவறாமல் செய்து வந்தால் எளிதாக குறைக்கலாம்.
Comments
Post a Comment