இன்றைய காலகட்டத்தில் இளமையை தக்கவைத்துக்கொளவதே மிகப்பெரிய சவாலாக மாறி விட்டது. இப்பொது உள்ள இளைஞர்களுக்கு திருமணம் ஆகும் முன்பே அனைத்து முடியும் வெள்ளையாக மாற ஆரம்பித்து விட்டது. இதனால் அவர்கள் ஹேர் டைய் பயன்படுத்தி முடியை கருமையாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஹேர் டைய் என்பது வெள்ளை முடியை கருமையாக்கும் கருமை முடியை வெள்ளையாக்கும்.
இதனை எளிமையாக சரி செய்ய பாட்டி வைத்தியத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளது அதில் சிலவற்றை நாம் இங்க காண்போம் ...
நெல்லிக்காய்(Gooseberry)
நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் காயவைத்து பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, பின் ஆரியதும் அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு (Coconut Oil and Lemon Juice)
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
மருதாணி பொடி(Henna powder)
ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் 2 ஸ்பூன் எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் கலக்கி முடியில் தேய்த்து ஊறவைத்து 5 நிமிடம் கழித்து அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
கறிவேப்பிலை(Curry leaves)
கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், நரை முடி விரைவில் மறைந்திடும்.
வெந்தயம் (Fenugreek)
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கலாம். இரவில் படுக்கும் போது வெந்தயத்தை தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரை முடி மறையும்.
ப்ளாக் டீ(Black Tea)
1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.
Comments
Post a Comment