முந்தய காலத்தில் அனைவரும் விவசாயம் போன்ற வேலைகளில் தான் ஈடுபட்டு வந்தனர். அதில் உடல் உழைப்பு மிகவும் அதிகமாக இருக்கும் அதற்கு ஏற்றாற்போல் உணவு உண்டதால் அவர்கள் நோய் நொடி இன்றி மிகவும் நிம்மதியாக வாழ்ந்தனர்.
அனால் தற்போது அனைவரும் உட்கார்ந்து வேலை பாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் யாருக்கும் உடல் உழைப்பு என்பதே இல்லை என்றாகிவிட்டது. உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும், அதனை கண்டிப்பாக செய்வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும் செய்து முடித்த பின்பும் என்ன உணவு உன்ன வேண்டும் என்று தெரிவதில்லை. எனவே இப்பதிவில் உடற்பயிற்சி செய்யும்போது நாம் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்!!!
காபி(Coffee)
உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
இஞ்சி டீ(Ginger Tea)
உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம்.
ஆப்பிள் (Apple)
ஆப்பிளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. தினமும் உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு ஆப்பிளை சாப்பிட்டு மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
பால் மற்றும் தேன் (Milk and Honey)
வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, உடற்பயிற்சிக்கு முன் குடித்தால், உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.
பருப்பு(Dhal)
பருப்பு வகைகளில் ( ஊற வைத்த கொண்டை கடலை , முளைகட்டிய பயறு வகைகள்) அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதச்சத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில் போதுமான அளவில் உள்ளது.
நட்ஸ் (Nuts)
நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் வளமையான அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் கால்சியம் அடங்கியிருக்கிறது. இதில் எளிமையான கார்போஹைட்ரேட் இருப்பதால், செரிமானம் சுலபமாக நடக்கும். மேலும் கிளைக்கோஜென்னின் அளவை அதிகரிக்கும். அதனால் உடலின் ஆற்றல் திறன் அதிகரிக்கும். 2 வாழைப்பழம் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது.
கோழிக்கறி(Chicken)
கோழிக்கறியில் புரதம், ஒமேகா-3 மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள உயிரணுக்களின் மெட்டபாலிச ஆற்றலை அதிகரிக்கும்.
வாரம் ஒரு முறை எதாவது அசைவ சூப் எடுத்து கொள்வது எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுவூட்டும்.
Comments
Post a Comment