குளிர்காலம் - நோய்கள் (Winter season diseases)
ஜீரணக் கோளாறு(Digestion problem) :
✤ குளிர் காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது. அஜீரணம் உருவாகலாம். பொதுவாக அதிக உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உரிய உணவு வகைகளைச் சாப்பிடாவிட்டால்இ ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும். இதுவே ஜீரணக் கோளாறு எனப்படும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்துஇ குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு ஏற்றவாறு உணவை சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவை உண்ணுதல் வேண்டும். இதன் மூலம் இதை தடுக்கலாம்.
மூட்டுவலி அதிகரிப்பு (Knee pain):
✤ குளிர் காலத்தில் சில நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். குறிப்பாக உடலில் வீக்கம் ஏற்படும் பகுதிகளான மூட்டு வலிஇ இடுப்பு வலிஇ ஸ்பான்டிலிட்டிஸ் ஆகியவற்றில் வலி தீவிரம் அடையலாம். வாத தோஷம் அதிகரிப்பால் நாள்பட்ட நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். வறட்டுக் குளிர் காரணமாக வாதம் அதிகரிக்கும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ ஆயுர்வேத மருத்துவத்திலும் உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். ஆயுர்வேத ஷீலக்ணம் (வலி நிவாரணி)இ வேதனஸ்பதனம் (வலி குறைப்பான்) மூலம் தீவிர வலியைக் குறைக்க முடியும்.
மூச்சுத் திணறல் (Suffocation):
✤ மூச்சுப் பயிற்சி சரியாக செய்யாதோர்இ உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர்இ சுவாச அடைப்புஇ இருமல்இ மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ திறந்த வெளியில்இ குளிர் அதிகம் உள்ள பகுதியில்இ படுப்பதை தவிர்க்க வேண்டும். மப்ளர்இ ஸ்வெட்டர் மற்றும் கம்பளி உடைகள் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மூடும் வகையிலானஇ ஆடைகள் பயன்படுத்தலாம்.
ஒற்றைத் தலைவலி(Head ache) :
✤ பனியில் அதிகம் சுற்றுவோர்இ தாமதமாக வீட்டுக்கு வருவோருக்குஇ குளிர் கால பிரச்னையாகஇ ஒற்றைத் தலைவலி வரும். இதுவே ஒற்றைத் தலைவலி ஆகும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ பனி விழும் நேரத்தில்இ வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தொப்பிஇ மப்ளர் அணிவது நல்லது. ஒற்றைத் தலைவலி அதிகம் இருந்தாலும்இ ஒற்றைத் தலைவலி தொடர்ந்தாலும்இ காதுஇ மூக்குஇ தொண்டை நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது.
மூச்சுக்குழல் சுருக்கம்(Bronchial contraction) :
✤ முதியோருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்படும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம்இ இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறையும். இதனால்இ ஸ்டிரோக் வர வாய்ப்புள்ளது.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ இரத்த ஓட்டம் சீராகஇ நீண்ட தூர நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது.
ஆஸ்துமா(Asthma)
✤ இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். மழை மற்றும் குளிர் காலங்களில் இந்நோய் உள்ளவர்களுக்கு அதிக மூச்சுத் திணறல்இ இருமல்இ சளி ஏற்படும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ குளிர்ந்த நேரங்களில் (அதிகாலைஇ மாலை) வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
❤ தவிர்க்க முடியாத நிலையில் செல்ல நேரிட்டால் காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ள வேண்டும்.
❤ ஜூஸ்இ ஐஸ் கிரீம்இ பழைய உணவு வகைகளை தவிர்க்கவும்.
❤ குடிநீர் மற்றும் உணவு வகைகளை மிதமான சூட்டில் உட்கொள்ள வேண்டும்.
நுரையீரல் தொந்தரவுகள்(Lungs problem) :
✤ குளிர்காலத்தில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும் போதுஇ நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால்இ தொண்டைக் கரகரப்பு வரலாம்இ நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ இதை தடுக்க குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
❤ தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
❤ உணவை சூடாக உட்கொள்ள வேண்டும். அதே சமயம் சத்தான காய்கறிகளையும்இ கீரைகளையும் உட்கொள்ள வேண்டும்.
❤ குளிர்ந்த காற்றில் இருப்பதை தடுக்க வேண்டும். இதன் மூலம் நோய்யைத் தடுக்கலாம்.
குறிப்பு :
✤ அரிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. இதனைத் தவிர்க்க ஈரப்பத மூட்டும் ஷhம்ப்புக்களை உபயோகித்து நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
Comments
Post a Comment