மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் - மன அழுத்தம் வராமல் காக்கும் முறைகள் - How to handle stress - Stress management
மனஅழுத்தம் என்றால் என்ன? (What is Stress)
ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும்.
முக்கிய காரணங்கள் :
1. வாழ்வியல் அழுத்தம் :
தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.
2. உள்நிலை அழுத்தம் :
இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.
3. சுற்றுச்சூழல் அழுத்தம் :
சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.
4. களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு :
அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது.
ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.
இதை படிக்கவும்
முடி உதிர்வதை தடுக்க மற்றும் பொடுகை போக்கும் வழிமுறைகள். சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியம்.
மன அழுத்தம் வராமல் காக்கும் முறைகள் (How to manage Stress)
1. மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.
2. மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சையாகும்.
3. நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் நடப்பதும் நல்ல உடற்பயிற்சிதான்.
4. மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம்.
5. தனிமையைத் தவிர்க்க வேண்டும்.
6. உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
7. நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும்.
8. மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது.
9. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.
10. கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம்.
இதை படிக்கவும்
Super
ReplyDeleteThanks
Delete