ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால். இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன? அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது?
வைரஸ் காய்ச்சல் : (Virus Fever)
✤ காற்று தண்ணீர் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள் வைரஸ் தன் தாக்கத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும்.
✤ காய்ச்சல் மிகுந்த சோர்வு, குமட்டல் கடுமையான உடல் வலி, அரிப்புக்கள், கடுமையான தலை வலி, இருமல் தொண்டைப்புண் அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை அதிகம் பருக வேண்டும். சத்தான ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
❤ நிலவேம்பு, வெற்றிவேர், விளாமிச்சவேர், சந்தன தூள், கோதைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கசாயம் செய்து காலை, மாலை, இரவு 3 வேளையும் 3 நாட்கள் குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும்.
டெங்கு காய்ச்சல் : (Dengue Fever)
✤ டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் கொசுவின் மூலமாக பரவக்கூடியது. ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கொண்டுள்ள பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து வைரஸை தன்னுள் எடுத்து மற்றவர்களுக்கு பரப்புகிறது.
✤ தலைவலி கை கால் மற்றும் உடம்பு வலி மற்றும் மிக கடுமையான காய்ச்சல் வரும். சிலருக்கு தோலில் ஆங்காங்கே தட்டம்மை போல தடிப்புகள் உண்டாகும். இலேசாக நாடித்துடிப்பு குறைதல் இரத்த அழுத்தம் குறைதல் கண்கள் சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ ஓய்வும் திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும் உடல் உஷணத்தைக் குறைக்கவும் அசிட்டாமினோஷபென் மாத்திரைகள் ஆகியவை கொடுக்க வேண்டும்.
❤ கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள் அணிய வேண்டும்.
❤ வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். மேலும் தண்ணீரை காய்ச்சி குடித்தல் வேண்டும்.
மலேரியா : (Malaria)
✤ மலேரியா காய்ச்சல் பெண் அனாஷபிலிஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.
✤ இக்கொசுக்கள் நம்மை இரவு நேரத்தில் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து இரத்தத்துக்கு வந்து இரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.
✤ குளிர் எடுத்தல், வியர்த்துக் கொட்டுதல், தலைவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ மாலை, இரவு நேரங்களில் அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும் செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடுக்க சிறந்த வழிகளாகும்.
❤ பெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம்.
❤ வீட்டின் ஜன்னல்கள், கதவுகளில் கொசு உட்புகுவதைத் தடுக்க பின்னல் வலைகளை அமைக்க வேண்டும்.
❤ பூச்சிகளை கொல்லும் தன்மை கொண்ட வலைகளை படுக்கையைச்சுற்றி அமைக்க வேண்டும்.
❤ கொசு உற்பத்தியாகக்கூடிய சூழல் உள்ள நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
❤ கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிக்கன் குனியா : (Chikungunya)
✤ ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில்தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும்.
✤ காய்ச்சல் மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், பிடிப்பு, தசைகளில் வலி, தலைவலி, பலவீனம், குமட்டல், வாந்தி, அரிப்பு ஆகியவை சிக்குன்குனியா நோயின் அறிகுறிகளாகும்.
✤ கைவிரல் மூட்டுக்கள். மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால். கால்விரல் மூட்டுக்களைத்தான் இந்த காய்ச்சல் மிக அதிகமாகத் தாக்கும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ கொசுவிரட்டிகள் உடலில் பூசிக்கொள்ளலாம் மற்றும் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
❤ இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
❤ நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
❤ வெளியே சென்று வீட்டிற்கு வரும்போது வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும்.
டைபாய்டு காய்ச்சல் : (Daipaidu fever)
✤ டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைபை என்னும் பாக்டீரியாவால் வருகிறது.
✤ அசுத்தமான குடிநீர் உணவு மூலமாக இந்த கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுகின்றன.
✤ டைபாய்டு காய்ச்சலுக்கு ஹகுடற்காய்ச்சல் (நுவெநசiஉ குநஎநச) என்று வேறு ஒரு பெயரும் உண்டு. காரணம் இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள் சிறுகுடலில் வசித்து அங்கேயே வளர்ந்து காய்ச்சலை உண்டாக்குவது தான்.
✤ ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்கும். மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல், எடை குறைவு, வேகமாக மூச்சுவிடுதல், எலும்பு மூட்டுகளிலும், தலையிலும் கடுமையான வலி, பசியின்மை, குமட்டல், வாந்தி, போன்ற அறிகுறிகள் தோன்றும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ இரு கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
❤ குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
❤ காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும், சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.
❤ வீடுகளிலும் தெருக்களிலும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.
சளி இருமல் : (Cold and Cough)
✤ பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். சளி மற்றும் இருமல் பிரச்னைகளால் அவதிப்படுவார்கள்.
✤ இன்ஃப்ள+யன்சா வைரஸ் காரணமாகவும் சளி இருமல் வரும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும், ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, ருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
நுரையீரல் தொந்தரவுகள் : (Lungs problem)
✤ மழைக்காலத்தில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால் தொண்டைக் கரகரப்பு வரலாம். நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ இதை தடுக்க மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
❤ தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
❤ உணவை சூடாக உட்கொள்ள வேண்டும். அதே சமயம் சத்தான காய்கறிகளையும், கீரைகளையும் உட்கொள்ள வேண்டும்.
❤ குளிர்ந்த காற்றில் இருப்பதை தடுக்க வேண்டும். இதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.
புளூ காய்ச்சல் : (Flu )
✤ மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது புளூ காய்ச்சல். இது ஒரு வகையான வைரஸ் நோய். இருமல், சளி மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படும். அதைத்தொடர்ந்து அதிக காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தடுக்கும் முறைகள் :
❤ குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்த வேண்டும். பழைய உணவுகள், குளர்ச்சியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. குழந்தைகளுக்கு புளூ காய்ச்சல் வந்தால், வலிப்பு ஏற்படலாம். எனவே, திரவ உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
ஆஸ்துமா : (Asthma)
✤ இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். மழை மற்றும் குளிர் காலங்களில் இந்நோய் உள்ளவர்களுக்கு அதிக மூச்சுத் திணறல், இருமல், சளி ஏற்படும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ குளிர்ந்த நேரங்களில் (அதிகாலை, மாலை) வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
❤ தவிர்க்க முடியாத நிலையில் செல்ல நேரிட்டால் காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ள வேண்டும்.
❤ ஜூஸ், ஐஸ் கிரீம், பழைய உணவு வகைகளை தவிர்க்கவும்.
❤ குடிநீர் மற்றும் உணவு வகைகளை மிதமான சூட்டில் உட்கொள்ள வேண்டும்.
மஞ்சள் காமாலை : (Jaundice)
✤ உணவு மாசு மூலம் 'பெடைட்டிஸ் - ஏ வைரஸ்கள்' தாக்கும்போது மஞ்சள் காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது கண் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
தடுக்கும் வழிமுறைகள் :
❤ சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது எண்ணெய் - கொழுப்பு உணவு வகைகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்தும்.
மூட்டு வியாதிகள் : (Join Disease)
✤ மழைக்காலங்களில் மூட்டு வலி மற்றும் வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபாதைகள் அதிகமாகும். மூட்டுகளில் ஒரு வகையான இறுக்கம் காணப்படும்.
தடுக்கும் முறைகள் :
❤ குளிர்ந்த தரையில் நடக்கும் போது செருப்பு அணிய வேண்டும். மிதமான மூட்டு பயிற்சிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும். வலி அதிகம் ஏற்பட்டால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் அருந்தாவிட்டால் நீர்கடுப்பு ஏற்படும்.
காது மூக்கு தொண்டை : (Ear, nose, throat) ENT
✤ மழைக்காலங்களில் டான்சில் மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.
தடுக்கும் முறைகள் :
❤ தினமும் உப்பு கலந்த வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும். குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
வயிற்றுப்போக்கு :(Diarrhea)
✤ மாசடைந்த குடிநீர், அசுத்த உணவு மூலம் ரோட்டா வைரஸ்கள் நமக்கு பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
தடுக்கும் முறைகள் :
❤ பாதிக்கப்பட்டவருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி கொடுக்க வேண்டும். உப்பும், சர்க்கரையும் கலந்த தண்ணீர் அல்லது 'எலெக்ட்ரால்' பவுடர் தரலாம்.
காலரா : (Cholera )
✤ பாக்டீரியாக்கள் மூலம் காலரா ஏற்படுகிறது. ஈக்களும், எறும்புகளும் இந்தக் கிருமிகளைப் பரப்புகின்றன.
தடுக்கும் முறைகள் :
❤ பாதிக்கப்பட்டவருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி கொடுக்க வேண்டும். உப்பும், சர்க்கரையும் கலந்த தண்ணீர் அல்லது 'எலெக்ட்ரால்' பவுடர் தரலாம்.
Thank you Suresh
ReplyDelete