நிறைய பேரு Weight Loss பண்ணனும் அதாவது அவங்களோட உடல் எடையை குறைக்க வேண்டும், எனக்கு தொப்பை இருக்கு என்னால fit ah டிரஸ் போட முடியலனு சொல்றவங்க எல்லாரும் எடுத்த உடனேஎன்ன நினைப்பார்கள் என்றால், உணவு சாப்பிடாமல் இருந்து உடல் எடையை குறைக்க நினைப்பார்கள்.
இதை படிக்க : இரவில் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா !!!!!!! - Benefits of night bath #bathing at nightnath #benefits of bath
இப்படி பண்றதால அவங்க உடம்புல இருக்குற நீர் சத்து குறைந்து (dehydration) ரொம்பவே ஒல்லி ஆகிட்றாங்க. இப்டிலாம் பண்ணாம வெற ஏதாச்சும் வழி இருகானு கேட்டிங்கனா கண்டிப்பா இருக்கு. அத இதுல பாக்கலாம்.
இதுல நாம பாக்க போறது எல்லாமே ஆதி காலத்துல இருந்தே மக்கள் தன்னோட உடல் எடையை சீராக வைத்துகொள்ள என்ன முறையை பின்பற்றினார்கள் என்பதே. அதனால் இந்த முறையை பின்பற்றினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இருக்காது என்பது நிதர்சனமான ஒன்று. இப்போது அது எல்லாம் என வழி முறை என்று பார்க்கலாம்.
மிக எளிமையான முறையில் பொடி ஒன்று தயாரித்து அதனை உட்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்
1. கொள்ளு (horse gram)
2. பூண்டு (Garlic)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கைப்பிடி அளவுக்கு கொள்ளு எடுத்துகொண்டு அதனை மிதமான சூட்டில் வறுக்கவும்.
கொள்ளு என்பது ஆதி காலத்திலேயே மனிதன் தன்னுடைய உடல் எடையை குறைக்க உட்கொண்ட ஒரு அற்புதமான தானியம். அதுமட்டுமில்லாமல் இது நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடல் எடையை குறைக்க சிறந்தது என்று பெயர் பெற்றது.
வறுக்கபடும் கொள்ளு பொன்னிறமாக மாறியதும் அதனை ஆற வைக்க வேண்டும். பின்னர் அதனை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் 4 அல்லது 5 பூண்டு பற்கள் இருக்குமாறு எடுத்துகொண்டு அதனை அரைத்து வைத்த கொள்ளு பொடியுடன் போட்டுக்கொள்ள வேண்டும்.
பூண்டு உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான குணம் உள்ளதும் அது மட்டும் இல்லாமல் அதில் அல்லிசின் (allicin) என்ற மருத்துவ பொருள் இருக்கு. அது நம்ம உடம்புல இருக்குற தேவையில்லாத கொழுப்புகளை உடனடியாக கரைக்கும் தன்மை கொண்டது.
பூண்டுடன் சேர்த்து கொள்ளு பொடியை அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பெட்டியில் அடைத்து வைத்துகொள்ள வேண்டும். அது 15 நாட்கள் கெடாமல் இருக்கும்.
சாப்பிடும் வழிமுறை
அரைத்து வைத்த பொடியை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சூடான நீருடன் சேர்த்து பருக வேண்டும். இது நோய் உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
இதனை காலையில் வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. காலை உணவு மதிய உணவுக்கு இடையிலோ அல்லது மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையிலோ சாப்பிடலாம்.
சிறந்த முடிவுகளை தரவல்லது. இதனை நீங்கள் அனைத்து நாட்களும் சாப்பிட கூடாது, ஏனென்றால் இது உடல் சூட்டை அதிகரித்து விட வாய்ப்பு உண்டு. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சாப்பிட்டால் போதும்.
இதுல எதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே !!!!!!
Comments
Post a Comment