பொதுவாகவே நம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு நம் மனம் மற்றும் உடல் இரண்டுமே காரணமாகும். நம் மனதில் ஏற்படும் பலவகை உணர்சிகளின் காரணமாகவே வியர்வை நாற்றம் ஏற்படுகிறது.
இந்த நேரம் சுரப்பிகள் வேகமாய் செயல்படுகின்றன. அந்த திரவத்தில் பாக்டீரியாக்கள் சேர்கின்றன. அதன் கூடவே வியர்வையும் சேர்வதால் தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு நாற்றம் ஏற்படுகிறது.
உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.
கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று. கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.
வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிகள்
2. அருகம்புல் சாறு தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.
3. புதினா குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.
4. தக்காளி சாறு தக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
5. தேன் குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
இதனை நாம் பின்பற்றி கொஞ்சம், இதில் கவனம் வைத்தால் இதிலிருந்து விடுபடலாம் !!!!
Comments
Post a Comment