முகப்பரு என்றால் என்ன ?
- தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாச் சுரப்பதால் தோலில் உள்ள துவாரங்கள் அடைப்பட்டு உண்டாவதுதான் முகப்பரு. பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும்.
- சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பருக்கள் தோன்றும்.
- சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பருக்கள் தோன்றும். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும்.
- இதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றும். 5 - ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும்.
இதை படிங்க: முகம் பொலிவு பெற நச்சுனு 4 டிப்ஸ் | Tips for glowing face 100% Natural
முகப்பரு வராமல் தடுக்கும் முறை :
- தினமும் குறைந்தது மூன்று முறையாவது முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. சந்தனச் சோப்பை உபயோகப்படுத்துவது நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது.
- முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை மிகவும் அழுத்தித் துடைக்க கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.
- முகத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகுக்காகக் களிம்புகளைப் பயன்படுத்த நினைக்கும் போது மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பயன்படுத்துவது பருக்கள் வருவதைத் தடுக்கும்.
- முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலையணை உறை, சோப் டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
முகப்பரு வந்தப்பின் காக்கும் முறை :
தினசரி எட்டுமணி நேரம் உறங்குவது சருமத்தை புதுப்பிக்க உதவும். இதனால் சருமம் ஆரோக்கியமாகும். எனவே நன்றாக ஓய்வெடுங்கள்முகப்பரு வராது.
கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். முகப்பருவை கிள்ளக் கூடாது. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பருக்களை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.
- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
Wow nice ua
ReplyDeleteThanks
Delete