இந்த நவீன காலத்தில் அறிவியல் வளர்ச்சியால் மக்கள் அனைவரும் செய்ய வேண்டிய வேலையை கணினி செய்கிறது. அதனால், மனிதனின் வேலை குறைகிறது இது ஒருபுறம் வளர்ச்சி என்றாலும் நம் உடலளவில் நாம் சில பாதிப்புகளை அடைகிறோம். இதனால், நோய்களால் பாதிக்கப்படுகிறோம் முன்னோர் காலத்தில் நோய் என்றால் சில கை வைத்தியம் வைத்திருப்பார்கள். அதனை பாட்டி வைத்தியம் என்போம் .
ஆனால், இப்பொழுதோ சின்ன பிரச்னை என்றாலும் மருத்துவரை தேடி ஓடுகிறோம். அனாலும் அந்த பிரச்னை நமக்கு அடிக்கடி வருவதை அறிவோம். ஆனால் பாட்டி வைத்தியத்தால் குணமானால் அது திரும்ப வராது என்பது முன்னோர்கள் கூற்று இங்கு சில பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது அதனை காண்போம்.
Translate this to other Language please choose the translate option in the right side of this Page.
தலை பாரம்
தலை பாரமாக இருந்தால், வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
இளம்பிள்ளை வாதம்
உள்ளிப் பூண்டு சாப்பிட்டால் குழந்தைகளின் இளம்பிள்ளை வாதம் குணமாகும். இந்தப் பூண்டு விஷமுறிவு ஏற்படச் செய்யும் தன்மை கொண்டது. இதற்குப் பாக்டீரியாவை அழிக்கும் சக்தியுள்ளது. மேலும் டைபாய்டு, காலரா மற்றும் தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.
பித்த வாந்தி
பித்த வாந்திக்குக் களாக்காயைச் சாப்பிட்டால் குணமாகும்.
குழந்தைகளுக்கு இருமல்
கடுக்காய்த் தூள், திப்பிலித் தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல் நீங்கும்.
தொண்டைக்குள் சதை
உப்பையும், புளியையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவி வந்தால் 'டான்சில்' எனப்படும் தொண்டைக்குள் சதை வளர்தல் குணமாகும்.
தலை பாரம்
நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கண்ணி வேர் இரண்டின் சாறையும் கலந்து பருக மூளை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
அஜீரணம்
ஒரு தம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டிக் குடிக்க அஜீரணம் சரியாகும்.
உடல் எடை குறைக்க
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொதிக்கவைத்து, வடிகட்டி அதில் சிறிது எலு மிச்சையைப் பிழிந்து. இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந் திருப்பதைக் காணலாம்.
ஆஸ்துமா
தூதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் படுக்கப் போகும் முன் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
நீரிழிவு நோய்க்கு
சிறிது இளம் சூடான வெந்நீரில் வெந்தயப் பொடி 1 டீஸ்பூன், கறிவேப்பிலை பொடி டீஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
உணவு சாப்பிடுவதற்கு முன்
பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்ந்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும் உணவு நன்றாக இருக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதனால் உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு, செரிமான பிரச்சனைகள் வராமல் காக்கும்.
இதை படிங்க :மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்?
Comments
Post a Comment