முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறைய
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.
இதை படிக்க : How to get rid of pimples permanently using home remedies - முகப்பரு வராமல் தடுக்கும் முறை
சரும வறட்சி அகல
ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த, சரும வறட்சி அகலும்.
தேவையற்ற முடிகளை அகற்ற
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவி மென்மையாக தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைய
வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன், தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.
இதை படிக்க : மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் - மன அழுத்தம் வராமல் காக்கும் முறைகள் - How to handle stress - Stress management
சருமம் வறட்சியை தடுக்க
ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு உலர வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்கினால் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படும்.
சருமம் பொலிவு பெற
ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் சீஸ் அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்-மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும். சருமத்தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.
முடி உதிர்வை தடுக்க
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்துவிடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில், ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தய பவுடர், இரண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் ‘பேக்’ போடவும்.
பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.
இதை படிக்க : பிராய்லர் கோழி சாப்பிடுவது சிறந்ததா ??? Is Broiler chicken safe to eat ???
Comments
Post a Comment