Skip to main content

Posts

பிராய்லர் கோழி சாப்பிடுவது சிறந்ததா ??? Is Broiler chicken safe to eat ???

                 இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட உணவகங்களில் சாப்பிடுவதையே மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதில் முதல் இடத்தை பிடிப்பது பிராய்லர் சிக்கன்( Broiler chicken ) தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் விதவிதமான கலர்களில் விற்கப்படும் பிராய்லர்  சிக்கன் உணவுகளையே மிகவும் விரும்புகின்றனர். இந்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் அதை தவிர்க்க முடியாமல் அதன் சுவைக்காக அதை விரும்பி சாப்பிடுகின்றனர். பிராய்லர் சிக்கனில் உள்ள கிருமிகள் மற்றும் வித்தியாசமான பாக்டீரியாக்கள், ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கிறது.    மரபணு மாற்றப்பட்ட கோழிகள்                  பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும் வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல...

பித்தம் அதிகமா இருக்கா !!! அதை குறைப்பதற்கான பாட்டி வைத்தியம் இதோ...

பித்த நீர் என்பது நமது சிறுகுடலின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்த நீர் அதிகமா சுரப்பதையே நாம் பித்த நோய் என்கிறோம். பொதுவாக நாம் காலை உணவை புறக்கணித்தாலோ, நேரம் தவறி சாப்பிடுவதாலோ , அளவுக்கு அதிகமா டி குடிப்பதனால் பித்தம் அதிகமா வரும் என சொல்லுவார்கள். மேலும் மனக்குழப்பம் உள்ளவர்களுக்கு பித்த நீர் அதிகமாக சுரக்கும், இதனை தடுக்க சில  பாட்டி  வைத்தியம் உள்ளது அதனை காண்போமா !!!! இயற்கை முறையிலான பித்தத்தை தணிக்கும் முறைகள்  இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பி...

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? | First aid for heart Attack

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??           மாலை மணி 6:30, வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது.. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,  உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.   ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !  உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண...

எப்போதும் நீங்கள் பளபளப்பாக இளமையாக தெரியனுமா..? 4 tips for being young

  "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை நம் முகம் காட்டிவிடும்.  முகம் நமக்கு கண்ணாடி போன்றது நம்முள் என பிரச்சனை வந்தாலும் முகம் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும்.   அது  மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம். என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. அதும் நம் வீட்டில் உள்ள பொருள் வைத்தே நாம் அழகா முடியும் என்றால் அதை விட வேறு என்ன வேண்டும். அதில் ஒன்று தான் முட்டை. முட்டை பயன்படுத்தாத வீடு உண்டு என்றே சொல்ல முடியாது அதனை பயன்படுத்தி எப்படி இளமையாக இருப்பது என்று இங்கு 4 வழி முறைகளை காணலாம். முகம் பளிச்சிட ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் ம...

உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் | Foods Before Exercise

முந்தய காலத்தில் அனைவரும் விவசாயம் போன்ற வேலைகளில் தான் ஈடுபட்டு வந்தனர். அதில் உடல் உழைப்பு மிகவும் அதிகமாக இருக்கும் அதற்கு ஏற்றாற்போல் உணவு உண்டதால் அவர்கள் நோய் நொடி இன்றி மிகவும் நிம்மதியாக வாழ்ந்தனர்.  அனால் தற்போது அனைவரும் உட்கார்ந்து வேலை பாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் யாருக்கும் உடல் உழைப்பு  என்பதே இல்லை  என்றாகிவிட்டது. உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும், அதனை கண்டிப்பாக செய்வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும் செய்து முடித்த பின்பும் என்ன  உணவு உன்ன வேண்டும் என்று தெரிவதில்லை. எனவே இப்பதிவில் உடற்பயிற்சி செய்யும்போது நாம் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்!!! காபி(Coffee) உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இஞ்சி டீ(Ginger Tea) உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம். ஆப்பிள் (Apple) ...

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா?? .இதோ சில டிப்ஸ்!

பெரும்பாலான மக்கள் பணம் சம்பாரிப்பதற்காக தன உடலின் நலனை கூட கருத்தில் கொள்ளாமல் வேலை வேலை என்று உள்ளனர்.  இதனால் தாங்கள் தூங்கும்போது கூட தன்னுடைய பிரச்னை மற்றும் வேலையை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருக்கின்றனர்.  இதனால் வரும் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி கஷ்டப்படுவோர்களுக்கு தான் இந்த பதிவு, தூக்கத்தை எப்படி வரவழைப்பது என்பதை பார்க்கலாம். வெங்காயம் (Onion): வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும். திப்பிலி (Thippili): திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும். மருதாணிப் பூ(Mehandi): மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் தூக்கம் வரும். பாகற்காய்(Bittergourd): நல்லெண்ணெயில் பாகற்...

நரை முடி அதிகமா இருக்கா? அதை போக்கும் சுலபமான வழிகள்

 இன்றைய காலகட்டத்தில் இளமையை தக்கவைத்துக்கொளவதே மிகப்பெரிய சவாலாக மாறி விட்டது. இப்பொது உள்ள இளைஞர்களுக்கு திருமணம் ஆகும் முன்பே அனைத்து முடியும் வெள்ளையாக மாற ஆரம்பித்து விட்டது. இதனால் அவர்கள் ஹேர் டைய் பயன்படுத்தி முடியை கருமையாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஹேர் டைய் என்பது வெள்ளை முடியை கருமையாக்கும் கருமை முடியை வெள்ளையாக்கும்.  இதனை எளிமையாக சரி செய்ய பாட்டி வைத்தியத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளது அதில் சிலவற்றை நாம் இங்க காண்போம் ... நெல்லிக்காய்(Gooseberry) நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் காயவைத்து பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, பின் ஆரியதும் அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறையும். தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு (Coconut Oil and Lemon Juice) தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். மருதாணி பொடி(Henna powder) ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் 2 ஸ்பூன் எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் ...