Skip to main content

Posts

Showing posts from August, 2020

பிராய்லர் கோழி சாப்பிடுவது சிறந்ததா ??? Is Broiler chicken safe to eat ???

                 இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட உணவகங்களில் சாப்பிடுவதையே மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதில் முதல் இடத்தை பிடிப்பது பிராய்லர் சிக்கன்( Broiler chicken ) தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் விதவிதமான கலர்களில் விற்கப்படும் பிராய்லர்  சிக்கன் உணவுகளையே மிகவும் விரும்புகின்றனர். இந்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் அதை தவிர்க்க முடியாமல் அதன் சுவைக்காக அதை விரும்பி சாப்பிடுகின்றனர். பிராய்லர் சிக்கனில் உள்ள கிருமிகள் மற்றும் வித்தியாசமான பாக்டீரியாக்கள், ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கிறது.    மரபணு மாற்றப்பட்ட கோழிகள்                  பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும் வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல...

பித்தம் அதிகமா இருக்கா !!! அதை குறைப்பதற்கான பாட்டி வைத்தியம் இதோ...

பித்த நீர் என்பது நமது சிறுகுடலின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்த நீர் அதிகமா சுரப்பதையே நாம் பித்த நோய் என்கிறோம். பொதுவாக நாம் காலை உணவை புறக்கணித்தாலோ, நேரம் தவறி சாப்பிடுவதாலோ , அளவுக்கு அதிகமா டி குடிப்பதனால் பித்தம் அதிகமா வரும் என சொல்லுவார்கள். மேலும் மனக்குழப்பம் உள்ளவர்களுக்கு பித்த நீர் அதிகமாக சுரக்கும், இதனை தடுக்க சில  பாட்டி  வைத்தியம் உள்ளது அதனை காண்போமா !!!! இயற்கை முறையிலான பித்தத்தை தணிக்கும் முறைகள்  இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பி...

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? | First aid for heart Attack

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??           மாலை மணி 6:30, வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது.. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,  உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.   ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !  உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண...

எப்போதும் நீங்கள் பளபளப்பாக இளமையாக தெரியனுமா..? 4 tips for being young

  "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை நம் முகம் காட்டிவிடும்.  முகம் நமக்கு கண்ணாடி போன்றது நம்முள் என பிரச்சனை வந்தாலும் முகம் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும்.   அது  மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம். என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. அதும் நம் வீட்டில் உள்ள பொருள் வைத்தே நாம் அழகா முடியும் என்றால் அதை விட வேறு என்ன வேண்டும். அதில் ஒன்று தான் முட்டை. முட்டை பயன்படுத்தாத வீடு உண்டு என்றே சொல்ல முடியாது அதனை பயன்படுத்தி எப்படி இளமையாக இருப்பது என்று இங்கு 4 வழி முறைகளை காணலாம். முகம் பளிச்சிட ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் ம...

உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் | Foods Before Exercise

முந்தய காலத்தில் அனைவரும் விவசாயம் போன்ற வேலைகளில் தான் ஈடுபட்டு வந்தனர். அதில் உடல் உழைப்பு மிகவும் அதிகமாக இருக்கும் அதற்கு ஏற்றாற்போல் உணவு உண்டதால் அவர்கள் நோய் நொடி இன்றி மிகவும் நிம்மதியாக வாழ்ந்தனர்.  அனால் தற்போது அனைவரும் உட்கார்ந்து வேலை பாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் யாருக்கும் உடல் உழைப்பு  என்பதே இல்லை  என்றாகிவிட்டது. உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும், அதனை கண்டிப்பாக செய்வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும் செய்து முடித்த பின்பும் என்ன  உணவு உன்ன வேண்டும் என்று தெரிவதில்லை. எனவே இப்பதிவில் உடற்பயிற்சி செய்யும்போது நாம் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்!!! காபி(Coffee) உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இஞ்சி டீ(Ginger Tea) உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம். ஆப்பிள் (Apple) ...

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா?? .இதோ சில டிப்ஸ்!

பெரும்பாலான மக்கள் பணம் சம்பாரிப்பதற்காக தன உடலின் நலனை கூட கருத்தில் கொள்ளாமல் வேலை வேலை என்று உள்ளனர்.  இதனால் தாங்கள் தூங்கும்போது கூட தன்னுடைய பிரச்னை மற்றும் வேலையை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருக்கின்றனர்.  இதனால் வரும் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி கஷ்டப்படுவோர்களுக்கு தான் இந்த பதிவு, தூக்கத்தை எப்படி வரவழைப்பது என்பதை பார்க்கலாம். வெங்காயம் (Onion): வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும். திப்பிலி (Thippili): திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும். மருதாணிப் பூ(Mehandi): மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் தூக்கம் வரும். பாகற்காய்(Bittergourd): நல்லெண்ணெயில் பாகற்...

நரை முடி அதிகமா இருக்கா? அதை போக்கும் சுலபமான வழிகள்

 இன்றைய காலகட்டத்தில் இளமையை தக்கவைத்துக்கொளவதே மிகப்பெரிய சவாலாக மாறி விட்டது. இப்பொது உள்ள இளைஞர்களுக்கு திருமணம் ஆகும் முன்பே அனைத்து முடியும் வெள்ளையாக மாற ஆரம்பித்து விட்டது. இதனால் அவர்கள் ஹேர் டைய் பயன்படுத்தி முடியை கருமையாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஹேர் டைய் என்பது வெள்ளை முடியை கருமையாக்கும் கருமை முடியை வெள்ளையாக்கும்.  இதனை எளிமையாக சரி செய்ய பாட்டி வைத்தியத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளது அதில் சிலவற்றை நாம் இங்க காண்போம் ... நெல்லிக்காய்(Gooseberry) நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் காயவைத்து பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, பின் ஆரியதும் அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறையும். தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு (Coconut Oil and Lemon Juice) தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். மருதாணி பொடி(Henna powder) ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் 2 ஸ்பூன் எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் ...

குளிர்காலம் வரப்போகுது கவனமா இருங்க !!!! (Winter season diseases)

குளிர்காலம் - நோய்கள் (Winter season diseases) ஜீரணக் கோளாறு(Digestion problem) :  ✤ குளிர் காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது. அஜீரணம் உருவாகலாம். பொதுவாக அதிக உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உரிய உணவு வகைகளைச் சாப்பிடாவிட்டால்இ ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும். இதுவே ஜீரணக் கோளாறு எனப்படும். தடுக்கும் வழிமுறைகள் :  ❤ உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்துஇ குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு ஏற்றவாறு உணவை சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவை உண்ணுதல் வேண்டும். இதன் மூலம் இதை தடுக்கலாம். மூட்டுவலி அதிகரிப்பு (Knee pain):  ✤ குளிர் காலத்தில் சில நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். குறிப்பாக உடலில் வீக்கம் ஏற்படும் பகுதிகளான மூட்டு வலிஇ இடுப்பு வலிஇ ஸ்பான்டிலிட்டிஸ் ஆகியவற்றில் வலி தீவிரம் அடையலாம். வாத தோஷம் அதிகரிப்பால் நாள்பட்ட நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். வறட்டுக் குளிர் காரணமாக வாதம் அ...

பித்த அதிகரிப்பு மற்றும் நரம்பு தளர்ச்சி... முருங்கை பூவின் மருத்துவ குணம் !!!!

  முருங்கையின் பயன்கள்( Drumstick tree benefits) பொதுவாக முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் மருத்துவ குணங்களை பலர் இந்த காலத்து மக்கள் மறந்து விட்டார்கள்.  முருங்கைக்கு நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும் . முருங்கைப் பிஞ்சு: முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு க...

முகம் பொலிவு பெற நச்சுனு 4 டிப்ஸ் | Tips for glowing face 100% Natural

நாம் அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள நினைப்போம் ஏனென்றால், முகம் தான் நமது உடல் உறுப்பில் ஒரு முக்கிய பங்கை வகிப்பதை நாம் அறிவோம். அப்படியான முகம் வெயில் மற்றும் தூசுகளால் பாலடைகின்றது. அதனை நாம் சரி செய்யவேண்டும். இங்கே, அதற்காக நச்சின்னு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதனை காண்போம். 1. முகம் பொலிவு பெற: கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். 2. முகம் புத்துணர்ச்சி பெற: மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்துங்கள். 3. முகம் பளிச்சிட: ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக ...

உங்கள் பார்வைத்திறனை பாதுகாப்பது எப்படி? How to take care of eyes #eyecare

பார்வைத்திறனை அதிகரிக்க(Eyes Care): பார்வை இல்லாத மனிதன் பாதி உயிர் இல்லாதவன் போல.எவ்வளவு தூரம் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தும், சமீபகாலமாக பார்வைத் திறன் குறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உங்கள் பார்வைத் திறனை பாதுகாக்க இதோ சில எளிய டிப்ஸ்... காட்ராக்ட் குறைபாட்டை குறைக்கும் ஒமேகா-3, விட்டமின் பி மற்றும் சி ஆகிய சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும் பச்சை காய்கறிகள்,கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள்: உங்கள் குடும்பத்தில் யாருக்காவது டைப் 2 வகை சர்க்கரை நோய் இருந்தால், நீங்கள் பார்வை விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போது இளைஞர்களின் பார்வை பறிபோக டைப் 2 சர்க்கரை நோய் முக்கிய காரணமாக இருக்கிறது. புகை பழக்கம் உள்ளவர்கள்: புகைப்பழக்கம் இருந்தால் கண் புரை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் கண்களில் உள்ள நரம்புகள் வலுவிழந்து பார்வைத்திறன் குறையவும் நேரலாம்.எனவே புகைப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். புற ஊதாக்கதிர்கள் உங்களுக்கு பார்வைக்குறைபாட்டை ஏற்படுத்தும். அதிக வெயிலில் பார்ப்பதை கு...

இரவில் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா !!!!!!! - Benefits of night bath | bathing at night bath #benefits of bath

நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் தினமும் குளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், புத்துணர்வோடும் இருப்போம். இரவில் ஏன் குளிக்க வேண்டும்: காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளை வழங்குகிறது. நாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையுடன் அப்படியே சென்று தூங்கும்போது அது உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம். எனவே இரவு தூங்கும்முன் குளிப்பது முகப்பருக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்களை தொற்றிக் கொள்ளும். இரவில் குளிக்கவில்லை என்றால் என்னாகும் ? இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அல...

எந்த மனநிலைக்கு எந்த டீயை குடிக்கலாம்? 10 Types of Tea for Mood | Tea for relaxation #tea #relax

நாம் அனைவருமே எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை.  ஏதாவது ஒரு நேரத்தில் கோபப்படுவோம், மனசோர்வாக இருப்போம், தூக்கமின்மையாக இருப்போம் இதனை சரி செய்ய ஒரு சில டீ வகைகளை அருந்தினால் நாம் அதிலிருந்து விடுபட்டு சுகமாக மனநிலையை உணரலாம். அது என்னென்ன டீ வகை என்று பார்ப்போமா ? தூக்கம் தேவைப்படும்போது : லாவெண்டர்(lavender) – இதன் சுவை மற்றும் மனம் அற்புதமாக இருக்கும். இதனை அருந்தும்பொழுது நமக்கு தூக்கமின்மையை குறைத்து தூக்கத்தை வரவழைக்கிறது மற்றும் இது இதய நோய் மற்றும் செரிமான பிரச்சனை யை சரி செய்வ உதவுகிறது. 2. பதற்றமாக இருக்கும்பொழுது (Anxious): டார்ட் செர்ரி (Tart Cherry) – இந்த டீயை பதற்றமான சூழ்நிலைகளில் அருந்தினால் மனதில் தெளிவு பிறக்கும். 3. சங்கடமான சூழ்நிலைகளில் இருக்கும்பொழுது (uneasy): பெப்பெர்மிண்ட் (peppermint) – மிளகுக்கீரை இலைகளால் ஆக்கப்பட்ட இந்த டீயை நாம் பருகினால் சங்கடமான சூழ்நிலைகளில் புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும்  இது செரிமானத்தை ஊக்குவிக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் , காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 4. நேர்மறை எண்ணங்கள் உருவாக:...

உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் - How to reduce fat in tamil tips

உடல் பருமனை எப்படி எளிதாக குறைக்கலாம் என்பதனை இங்கு பார்ப்போம், இதற்கு எந்த ஒரு உடற்பயிற்சியும் தேவை இல்லை. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து சீக்கிரமாகவே ஸ்லிம்மாக மாறலாம்.  உடல் எடையைக் குறைப்பது எப்படி  என்ற   செய்முறையை வீட்டிலேயே செய்து நீங்கள் பயன் பெறலாம். 1.முறை #1 தேவையான பொருட்கள்: சீரகம் (2 டேபிள் ஸ்பூன்) எலுமிச்சை சாறு (1 டேபிள் ஸ்பூன்) தேன் (1 டேபிள் ஸ்பூன்) செய்முறை: சீரகத்தை எடுத்து நன்றாக கழுவி இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், பின்னர் அதனை மறு நாள் காலை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சீரகம் தண்ணீர் இரண்டையும் நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் சீரக  நீரை மட்டும் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலை பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஸ்லிம்மாக மாறும். முறை #2 தேவையான பொருட்கள்: சீரகம் 100 கிராம் தேன் (1 டேபிள் ஸ்பூன்) செய்முறை: 100 கிராம் சீரகத்தை அரைத்து நன்றாக பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதனை சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் கலக்கி அதனுடன் தேன் சேர்த்து காலை மாலை இரு வேலைக...

முடி உதிர்வதை தடுக்க மற்றும் பொடுகை போக்கும் வழிமுறைகள். சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியம்.

ஆண்களோ பெண்களோ இப்பொது இருக்கும் அனைவர்க்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் மற்றும் பொடுகு. ஒரு நாளுக்கு சராசரியாக 100 முடி உதிரலாம் அதற்கு மேல் உதிர்ந்தால் அதனை சரி செய்ய வேண்டும். இங்கே சில வீடு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதனை என்னவென்று பாப்போம். 1. வெங்காயம்(Onion): வெங்காயம் முடி உதிர்வதை தடுக்கும் ஒரு அறிய மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள சல்பர் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் , முடி உதிர்ந்த இடத்தில திரும்ப முடியை வளர செய்யும். வெங்காயத்தை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதனை முடி இல்லாத வழுக்கையான இடத்திலோ அல்லது ஸ்கல்ப் (முடியின் வேர் பகுதி) தடவ வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது கெமிக்கல் குறைவாக இருக்கும் ஷாம்பு உபயோகித்து குளிர்ந்த நீரில் அலசவும். இதே மாதிரி வாரத்திற்கு 2-3 தடவை செய்து வந்தால் மாற்றத்தை காணலாம். வெங்காயத்துடன், பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து கூட உபயோக படுத்தினால் முடி உதிர்வது மட்டுமில்லாமல் பொடுகையும் கட்டுப்படுத்தும். 2. வெந்தயம்(Fenugreek): வெந்தயம் முடிக்கு பளபளப...

தொப்பை என்பது என்ன? அது எதனால் வருகிறது? அதை குறைக்க என்ன செய்யலாம்? Belly Fat in Tamil

  தொப்பை என்பது ஆறில் இருந்து அறுபது வரை அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை. தற்போது இளம் வயதினருக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.  இதனை ஒரு உடல் உறுப்பு மாதிரி நாம் நினைத்து கொள்கிறோம். அது தனியாக இருக்கிறதே அது ஒரு வியாதியின் காரணமாக இருக்குமோ என்னமோ என்று யாரும் இப்பொழுது நினைத்து பார்ப்பதில்லை. அழகியல் சம்மந்தமாக மட்டுமே நாம் அதை நினைத்து கவலை படுகிறோம், ஆனால் அதனால் ஏற்படும் வியாதியை நாம் யோசிப்பதில்லை. தொப்பை இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது நாம் தொப்பையை சரி செய்வதற்கு அந்த காரணங்களை சரி செய்தால் மட்டுமே முடியும். என்னென்ன காரணத்தினால் தொப்பை வருகிறது: அஜீரணம் இதற்கு ஒரு முக்கிய காரணம். இதனால் பல வயிற்று சம்மந்தப்பட்ட நோய்களும் வரும். நாம் சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என்றால் அது கண்டிப்பாக தொப்பையை தான் போய் முடியும். மலச்சிக்கல் ஏற்படுவதானால் கூட தொப்பை வர நிறைய காரணங்கள் உள்ளது. வாயு தொல்லை மற்றும் வாயு வெளியில் போகாமல் இருப்பது. வாயு வெளியில் போகாமல் இருக்குமேயானால் வயிறு உப்புசமாக இருக்கும், நாளடைவில் அது தொப்பையாக மாறக்கூடும். குடலில் இருக்கும் பிரச்னையால்...

How to lose weight fast: Quick & Easy Weight Loss Tips in Tamil | Patti Vaithiyam

நிறைய பேரு Weight Loss பண்ணனும் அதாவது அவங்களோட உடல் எடையை குறைக்க வேண்டும், எனக்கு தொப்பை இருக்கு என்னால fit ah டிரஸ் போட முடியலனு சொல்றவங்க எல்லாரும் எடுத்த உடனேஎன்ன நினைப்பார்கள் என்றால், உணவு சாப்பிடாமல் இருந்து உடல் எடையை குறைக்க நினைப்பார்கள் .  இதை படிக்க :  இரவில் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா !!!!!!! - Benefits of night bath #bathing at nightnath #benefits of bath இப்படி பண்றதால அவங்க உடம்புல இருக்குற நீர் சத்து குறைந்து (dehydration) ரொம்பவே ஒல்லி ஆகிட்றாங்க. இப்டிலாம் பண்ணாம வெற ஏதாச்சும் வழி இருகானு கேட்டிங்கனா கண்டிப்பா இருக்கு. அத இதுல பாக்கலாம். இதுல நாம பாக்க போறது எல்லாமே ஆதி காலத்துல இருந்தே மக்கள் தன்னோட உடல் எடையை சீராக வைத்துகொள்ள என்ன முறையை பின்பற்றினார்கள் என்பதே. அதனால் இந்த முறையை பின்பற்றினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இருக்காது என்பது நிதர்சனமான ஒன்று. இப்போது அது எல்லாம் என வழி முறை என்று பார்க்கலாம். மிக எளிமையான முறையில் பொடி ஒன்று தயாரித்து அதனை உட்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைக்கலாம். தேவையான பொருட்கள் 1. கொள்ளு (horse gram) 2. பூண்டு (Gar...